பொ.நி.சு 96

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 1975.07.09 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1975.04.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் E code VII  4 படி சம்பள மாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ.நி.சு 197

இச்சுற்றறிக்கைவெளிவந்ததிகதி 1981.12.29 ஆகும்.
இச்சுற்றறிக்கைவலுப்பெறும் திகதி 1982.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப்படிநிலைஎனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ.நி.சு 327

இச்சுற்றறிக்கைவெளிவந்ததிகதி 1986.05.02 ஆகும்.
இச்சுற்றறிக்கைவலுப்பெறும் திகதி 1986.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் E code VII(4) படி சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின்படிஅரசஉத்தியோகத்தர்கள் அனைவரினதும் வேதனஏற்றதிகதி ஜனவரி 01 ஆக கொள்ளப்படுகின்றது. 
இவ்வாண்டில் மாத்திரம் வேதனஏற்றதிகதி ஜனவரி 01 ஆக உள்ளவர்களுக்குபழையசம்பளஅளவுத்திட்டத்தின் பிரகாரம் வேதனஏற்றம் வழங்கிய பின்னரே சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பொ.நி.சு 387

இச்சுற்றறிக்கை வெளிவந்ததிகதி 1987.10.11 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1988.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1987.12.31 இல் பெற்றசம்பளத்துடன் 6048 ரூபா வாழ்க்கைப்படிச் செலவினை சேர்த்துக் கணக்கிடுதல் வேண்டும்.
இதன் போது பெறப்படும் மொத்தஅதிகரிப்பின் 50% ஜ 1988.01.01 இலும் மிகுதி 50% ஜ 1988.11.01 இலும் வழங்குதல் வேண்டும்.

பொ.நி.சு 37/92

இச்சுற்றறிக்கை வெளிவந்ததிகதி 1992.12.24 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1993.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின் படி பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பின் 50% இனை 1993.01.01 இலும் மிகுதி 50% இனை 1994.01.01 இலும் வழங்குதல் வேண்டும்.
பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பின் 60% இனை 1993.01.01 இலும் மிகுதி 40% இனை 1993.07.01 இலும் வழங்குதல் வேண்டும்.

பொ.நி.சு 29/94

இச்சுற்றறிக்கை வெளிவந்ததிகதி 1994.07.08 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1994.08.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கை எழுதுநர் மற்றும் அதனோடு இணைந்தசேவைகளுக்காக வெளியிடப்பட்டது. 

பொ.நி.சு 34/95

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 1995.11.14 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1995.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ.நி.சு 2/97(III)

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 1997.11.12 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1997.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாகப் பெற்ற சம்பளத்துடன் வாழ்க்கைப்படிச் செலவாக பதவிநிலைஉத்தியோகத்தர்களுக்கு 7200.00 ரூபாவும், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 10320.00 ரூபாவும் சேர்க்கப்பட்டு பெறப்படும் அதிகரிப்பின் 40% இனை 1997.01.01 இலும் மிகுதி 60% இனை 1998.01.01 இலும் வழங்குதல் வேண்டும்.

பொ.நி.சு 15/2003

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2003.12.30 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2004.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ.நி.சு 09/2004

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2004.12.27 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2004.12.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிப்பின் 50% ஆனது 30000.00 ரூபாவுக்கு அதிமானால் அத்தொகையையும்  அல்லது 30000.00 ரூபாவுக்கு குறைவானால் 30000.00 ரூபாவும் 2004.12.01 இலும் மிகுதி 2006.01.01 இலும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இம்மிகுதியானது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொ.நி.சு 06/2006

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2006.04.25 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2006.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப்படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக சம்பளஅளவுத்திட்டமானது மாதாந்தத்திற்கென மாற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
பொ.நி.சு-15/2000,  பொ.நி.சு-24/2001 இற்கிணங்க 1200.00 ரூபா + 1000.00 அல்லது அடிப்படைச் சம்பளத்தின் 10% இதில் எது கூடவோ அதுவும் சம்பளத்துடன் கூட்டப்பட்டது.
அதிகரிப்பின் 50%  2006.01.01 இலும் மிகுதி 50%  2007.01.01 இலும் வழங்கப்பட்டது.

பொ.நி.சு 06/2006(IV)

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2007.08.24 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2007.06.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் E code VII 4 படி சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ.நி.சு 28/2010

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2010.12.31 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2007.06.01 ஆகும்.
எனினும் சம்பள நிலுவையானது  2011.07.01 ஆம் திகதியிலிருந்து வழங்கப்படுதல் வேண்டும். மேலும் பொ.நி.சு-06/2006(IV) இல் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்வதற்காகவே இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொ.நி.சு 03/2016

இலங்கை அரசாங்க சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களினதும் சம்பளக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றறிக்கை அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 03/2016 (Public Administration Circular 03/2016) ஆகும்.

இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2016.02.25 ஆகும்.

இது 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டது. இதன் முக்கிய விபரங்கள் இதோ:


1. சுற்றறிக்கையின் நோக்கம்

அரசாங்க ஊழியர்களுக்கிடையே காணப்பட்ட சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதற்கும் இது கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னைய சம்பளக் கட்டமைப்பான 06/2006 சுற்றறிக்கையை இது முழுமையாக மாற்றியமைத்தது.


2. ஐந்து கட்ட அமுலாக்கம் (Five-Step Implementation)

இந்தச் சுற்றறிக்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு ஒரே தடவையில் வழங்கப்படவில்லை. 2016 முதல் 2020 வரை 5 கட்டங்களாக வழங்கப்பட்டது:

  • கட்டம் 1: 2016.01.01

  • கட்டம் 2: 2017.01.01

  • கட்டம் 3: 2018.01.01

  • கட்டம் 4: 2019.01.01

  • கட்டம் 5: 2020.01.01 (முழுமையான அதிகரிப்பு பூர்த்தி செய்யப்பட்டது)


3. புதிய சம்பளக் குறியீடுகள் (Salary Codes)

இந்தச் சுற்றறிக்கையின் கீழ் அனைத்துப் பதவிகளும் அவற்றின் பொறுப்பு மற்றும் தகைமைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டன. உதாரணமாக:

  • PL (Primary Level): அலுவலக உதவியாளர் போன்ற ஆரம்ப நிலை ஊழியர்கள்.

  • MN (Management Service): முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள்.

  • MT (Management & Technical): முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்.

  • SL (Sri Lanka Service): இலங்கை நிர்வாக சேவை போன்ற நிறைவேற்று அதிகாரிகள்.


4. சம்பளம் மாற்றியமைக்கப்படும் முறை

ஒரு ஊழியர் 2016 இற்கு முன் பெற்ற சம்பளம், புதிய சம்பளத் தராதரத்திற்கு எவ்வாறு மாற்றப்படும் என்பதற்கான சூத்திரம் (Formula) இதில் விளக்கப்பட்டுள்ளது:

  • புதிய அடிப்படைச் சம்பளம் கணக்கிடப்படும் போது, பழைய அடிப்படைச் சம்பளத்துடன் அதற்குரிய மேலதிக படிகள் சேர்க்கப்பட்டு புதிய சம்பள ஏணியில் (Salary Scale) அதற்குச் சமமான அல்லது அதற்கு அடுத்த மேல் படிநிலையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.


5. வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

  • இந்தச் சுற்றறிக்கையின்படி, அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டதால், அதற்கு இணையாக வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுப் படியிலும் (Cost of Living Allowance) மாற்றங்கள் செய்யப்பட்டன.

  • ஓய்வூதியக் கணிப்பீடுகளுக்கு இந்த 03/2016 அடிப்படைச் சம்பளமே பிரதான காரணியாகப் பயன்படுத்தப்பட்டது.


6. வினைத்திறன் தடைதாண்டல் (EB Exam) மற்றும் சம்பள ஏற்றம்

  • ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் சம்பள ஏற்றத்தை (Salary Increment) தொடர்ந்து பெறுவதற்கு, குறித்த காலப்பகுதிக்குள் ஊழியர்கள் வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளில் (EB Exams) சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையை இது வலுப்படுத்தியது.

  • சித்தியடையத் தவறினால் சம்பள ஏற்றம் நிறுத்தப்படும் (Increment Stoppage) முறைகளையும் இது விளக்குகிறது.


7. தற்போதைய நிலை (2026)

தற்போது 2026 இல் நாம் இருந்தாலும், பல ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பளக் கணிப்பீடுகளுக்கு 03/2016 இன்றும் ஒரு அடிப்படை ஆவணமாகத் திகழ்கிறது. எனினும், அண்மையில் வெளியான 10/2025 போன்ற புதிய சுற்றறிக்கைகள் இந்த 03/2016 இன் சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகளை இணைத்து புதிய சம்பளக் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன.

சுருக்கமாக: 03/2016 சுற்றறிக்கை என்பது இலங்கையின் அரச சேவைச் சம்பள வரலாற்றில் அடிப்படைச் சம்பளத்தை பெருமளவு உயர்த்திய ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

மரணப் பணிக்கொடை(Death Gratuity)

அரசாங்க சேவையொன்றில் நிரந்தர ஓய்வூதியத்துடனான நியமன மொன்றைப் பெற்று அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டு  நிரந்தர ஓய்வூதியத்துடனான 5 வருடங்கள் (60 மாதங்கள்) பூர்த்தி செய்து அரச சேவையில் இருக்கும் காலத்தில் மரணமடையும் அரச உத்தியோகத்தர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு ஒரு முறைக் கொடுப்பனவு மரணப் பணிக்கொடை எனப்படும்.

இது அவரது குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் 24 மாதக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
மரணப் பணிக்கொடையினைப் பெறவதற்கு உரித்துடையவர்கள்

1.திருமணமான உத்தியோகத்தர் உயிரிழக்கும் போது சட்டரீதியான  மனைவி/தபுதாரர் மற்றும் தொழிலற்ற திருமணமாகாத பிள்ளைகள்.

2.திருமணமாகாத உத்தியோகத்தர்கள் உயிரிழக்கும் போது தாய் மற்றும் தந்தை பெற்றோர் இல்லையாயின் இறந்தவரின் பராமரிப்பிலிருந்த திருமணமாகாத சகோதர சகோதரிகள்.

3.உரித்துடைய பயனாளிகள் இல்லாத பட்சத்தில் மரணமடைந்த உத்தியோகத்தர் அரசுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் ஏதுமிருப்பின் அதனை ஈடுசெய்து கொள்வதற்காக மாத்திரம் மரணப் பணிக்கொடை வழங்கப்படும்.

அச்சுப்  பிரதியுடன்  பின்வரும்  ஆவணங்கள்  ஓய்வூதியத்  திணைக்களத்திற்கு  அனுப்பப்படுதல் வேண்டும்.

1. அலுவலரின் மரணச் சான்றிதழின் மூலப்பிரதி.

2.துணைவரினதும் பிள்ளைகளினதும் அல்லது திருமணம் முடிக்காத அலுவலர் இறப்பின் பெற்றோர்களினதும் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.

3.மரணப் பணிக்கொடையினைப் பெற்றுவதற்கு உரிமை     
 உள்ளவரின் உறுதிப்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி

4.எல்லா பிள்ளைகளினதும் உறுதிப்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி.

5.தேசிய அடையாள அட்டை, வரலாற்றுத் தாள், இறுதிச் சம்பள விபரம் என்பவற்றின் உறுதிப்படுத்திய் பிரதி.

6. பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இற்கு அமைய தயாரிக்கப்பட்ட சம்பள மற்றக் கடிதம்.

7. பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்திய தங்கி வாழ்வோர் அறிக்கை.

8. பூரணப்படுத்திய  PD4  படிவம்.

Note:- 2018.06.01 ஆம் திகதியில் இருந்து இயங்கலையின் மூலம் மரணப் பணிக்கொடைக்கான புதிய விண்ணப்பமான  PD5  இனைப் பூரணப்படுத்தல் வேண்டும்.

மரணப் பணிக்கொடை கணிப்பீடு செய்யும் முறை

1.ஓய்வூதிய உரித்துடைய மொத்த சேவைக்காலத்தைக் கணிப்பீடு செய்தல்.

2.இச் சேவைக்காலமானது 25 வருடங்களுக்கு மேலானதாகக்  காணப்படின் அதற்குரியது போன்று அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள சதவீதங்களை கணிப்பீட்டின் பொருட்டு பயன்படுத்த முடியும்.

3.இச்சேவைக்காலமானது 25 வருடங்களிலும் பார்க்க குறைவாகக் காணப்படுமாயின் அக்குறைவான காலப்பகுதிக்கு வருடமொன்றுக்கு 2% வீதமும் ஒவ்வொரு ஆறு மாதம் அல்லது அதிலும் குறைவான காலப்பகுதிக்கு 1% வீதமும் கணக்கிட்டு 25 வருட சேவைக்கால சதவீதத்திலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.

4.சம்பளமற்ற விடுமுறைகள் ஏதும் காணப்படுமாயின் அதில் ஒரு வருடத்தை விலக்களிக்க முடிவதுடன் ஏனைய ஒவ்வொரு மாதங்களுக்கும் 0.2% வீதப்படி கணிப்பீடு செய்து அதனை மொத்தசதவீதத்திலிருந்து கழிப்பனவு செய்தல் வேண்டும்.

5.மேற்படி தேறிய சதவீதத்தினை இறுதியாகப் பெற்ற ஆண்டுச் சம்பளத்தினால் பெருக்கி அதனை இரண்டினால் பெருக்கக் கிடைப்பதே மரணப் பணிக்கொடை தொகையாகும்.

6.மேற்படி மரணப் பணிக்கொடையில் அரைவாசித் தொகை சட்டபூர்வமான மனைவிக்கும் மற்றைய அரைவாசித் தொகை சட்டபூர்வமான பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமமாகப் பங்கிடப்படுதல் வேண்டும்.

ஓய்வூதியத்தின் வகைகள்

குறித்த உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற பதவியைப் பொறுத்து பெற்றுக்கொள்ளும் நன்மைகளும் வேறுபடும்.

1. சிவில் ஓய்வூதியம்
2. ஓய்வூதியப் பணிக்கொடை
3. மரணப் பணிக்கொடை
4. விதவைகள்/ தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம்
5. ஆயுதப்படைச் சேவை ஓய்வூதியம்
6. அரசசேவை சேமலாப நிதியம் (PSPF)
7. விசேட நட்ட ஈட்டு ஓய்வூதியம்
8. நட்ட ஈட்டு ஓய்வூதியம்

ஓய்வூதியப் பணிக்கொடை(Pension Gratuity)

நிரந்தர அரசாங்க சேவையுடைய உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வுக்குச் செல்கையில் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்குரிய குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் 24 மடங்கினை ஒரு தடவை மட்டும் வழங்குதல் ஓய்வூதியப் பணிக்கொடையாகும்.
இதற்காக பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.

1.ஓய்வூதியரின் விருப்புக் கடிதம் பெறல் வேண்டும். புணிக்கொடையினை ஒருவர் பெறுவாராயின் 10 வருடத்திற்கு அல்லது ஓய்வூதியரின் இறப்பு ஆகிய இரண்டில் முந்திய காரணம் நிகழும் வரை குறைக்கப்பட்ட ஓய்வூதியமே வழங்கப்படும். 

2.20 வருட சேவை முடிவில் ஓய்வு பெறுபவர்கள் 50 வயதையும் நீதிபதிகள் தவிர்ந்த ஏனைய சிவில் ஓய்வூதியர்கள் 55 வயதையும் அடைந்திருத்தல் வேண்டும். 

3.தற்போது ஓய்வுதியம் மீளாய்வு செய்யப்படும் போது PD6 விண்ணப்பப் படிவத்தை இயங்கலையின் ஊடாக (PMS) அனுப்ப வேண்டும். இதனைப் பிரதேச செயலகத்திற்கு அனுப்பத் தேவையில்லை. 

4.பிரதேச செயலகங்களுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மீளாய்வுக்கான அனுமதிக் கடிதத்தினை இயங்கலையில் பெற்று அதனை உறுதிப்படுத்தி அனுப்புதல் கட்டாயமாகும்.

ஓய்வூதியம் பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள்

ஓய்வு பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளதுடன் காலத்துக்கு  காலம்  பொது  நிருவாக  அமைச்சினாலும்  ஓய்தியத்  திணைக்களத்தினாலும்  வெளியிடப்படுகின்ற  சுற்றறிக்கைகளினாலும்  இந்தச்  சட்ட  ஏற்பாடுகள்  மீளமைக்கப்படலாம்.

1.விருப்பத்துக்கிணங்க  ஓய்வுபெறல்.
ஓ.பி 2: 17  மற்றும்  26 (ix)  என்பவற்றின் படி  55-60  வயதுக்கிடைப் பட்டவர்கள்  ஒய்வுபெறுவதைக்  குறிக்கும்.

2.கட்டாய ஓய்வு பெறுதல்.
ஓ.பி 2:17  இன் படி  60  வயதையடைந்தவர்கள்  ஓய்வு பெறுவதைக்  குறிக்கும்.  ஆனால்  சில திணைக்கள அதிகாரிகளுக்கு இது பொருந்தாது.

Eg:- பொறியியலாளர்கள் பொ.நி.சு  06/2017 இன் படி 61 வயது வரைக்குப் பின்னர்  ஓய்வுபெறல்.

3.மருத்துவக் காரணங்கள்
ஓ.பி 2:14 இன் படி அரச ஊழியருக்கு கடமையாற்றுவதற்கு முடியாதென வைத்திய சபையொன்றின் விதந்துரைப்பின் படி வழங்கப்படுவதாகும். இதற்கு குறைந்தது 120 மாதங்கள் குறித்த அலுவலர் தொடர்ச்சியாகக் கடமை புரிந்திருத்தல் அவசியமாகும்.

4.பதவி வழக்கொழிதலின் (பதவி காலவதியாதலின்) மூலம் ஓய்வு பெறச்செய்தல்.
ஓ.பி 2:7 இன் படி பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குதல். 

1. 120 மாத சேவைக் காலத்தைக் கொண்டிருத்தல்
2.ஓய்வூதிய பணிக்கொடையும், மாதாந்த ஓய்வூதியமும் ஓய்வு  
   பெறும் தினத்திலிருந்து கிடைக்கும்.
3. 60 மாத சேவைக்காலம் கூட்டுச் சேர்க்கப்படும்.
4.120 மாத சேவைக்காலம் இல்லாத போது 50% சேவைக் காலத்தினைக் கூட்டி மாதாந்த வேதனத்தின் 1/12% கணக்கிடப்பட்ட    பணிக்கொடை ஒன்று கிடைக்கும்.

5. அரச மொழிகள் குறிக்கோளின் கீழ் ஓய்வு பெறல்
ஓ.பி 2:48 இன் படி பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குதல். 

620 வருட சேவைக் காலம் அல்லது வயது 50 வருடங்களாகும் திகதி ஆகிய இரண்டில் முந்திய திகதியில் ஓய்வு பெறல்.

ஓ.பி 2:14 இன் படி ஓய்வு பெறுவதாகும்.

பெண் ஆசிரியைகள், பெண் தாதியர்கள், பெண் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு மாத்திரம் உரித்தாகும். 

7.ஒழுக்காற்றுக் காரணங்களின் மூலம் ஓய்வு பெறச்செய்தல்.

ஓ.பி 2:12 இன் படி ஓய்வு பெறுவதாகும்.

ஒழுக்காற்று விசாரணை முடிவடையாமல் மாதாந்த ஓய்வூதியமோ பணிக்கொடையோ வழங்கப்பட மாட்டாது.

8.வினைத்திறமையின்மை காரணமாக ஓய்வு பெறச்செய்தல்.

ஓ.பி 2:15 இன் படி ஓய்வு பெறுவதாகும். ஓ.சு. 30/88 இன் படி 20 வருட சேவையைப் பூர்த்தி செய்த எந்த அரச உத்தியோகத்தர்களும் ஓய்வு பெறல்.

ஆனால்,  55 வயதில் இருந்துதான் அவருக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை என்பன வழங்கப்படும்.

 9.  நீதித்துறை அதிகாரிகளை ஓய்வு பெறச்செய்தல்.

ஓ.பி 2:25 இன் படி மேல் நீதிமன்ற நீதிபதி 65 வயதிலும் மேன்முறையீட்டு நீதிபதி 63 வயதிலும் உயர் நீதிமன்ற நீதிபதி 61 வயதிலும் ஏனைய நீதிபதிகள் 60 வயதிலும் ஓய்வு   பெறலாம்.

10. ஓய்வூதியத்தை இடைநிறுத்தி அரச கூட்டுத்தாபன அல்லது அதிகார சபையில் சேவையாற்றுவதற்கு ஓய்வு பெறல்

ஓ.பி 2:48(அ) இன் படி ஓய்வூதியம் வழங்கப்படுவது அரச கூட்டுத்தாபனத்தில் இருந்து முறையாக ஓய்வு பெறும் தினத்தில் இருந்தாகும்.