காசோலையை எழுதும் போது பின்பற்ற வேண்டியவை

 

அழிக்க முடியாத மையினால் எழுத வேண்டும்.

காசோலையின் சொற்களும், இலக்கங்களும் எழுதப்படும் போது இடைவெளி விடக்கூடாது.

பதவிப் பெயரிற்கு காசோலை எழுதும் போது பதவிப்பெயரானது முழுமையாக எழுதப்படல் வேண்டும்.

பெறுவோனுக்கு வங்கியில் கணக்கு இருக்குமாயின் பெறுவோன் கணக்கு மட்டும் என குறுக்கோடிடப்பட்டு வழங்குதல்.

கொடுப்பனவு உறுதிச்சீட்டு இலக்கத்தை காசோலையின் அடியிதழில் குறிப்பிடுதல் வேண்டும்.

காசோலையின் செல்லுபடிக்காலம் 30 நாட்களை கொண்டுள்ளதா என சரிபார்த்தல்.

அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல்.

காலநீடிப்பின் போது அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல் வேண்டும்.


வங்கிக் கணக்கை திறத்தல்

வங்கிக் கணக்கை திறப்பதற்கான விண்ணப்பம் அதற்கான அவசியத்தன்மை என்பவற்றை விளக்கி திறைசேரி கணக்குகள் திணைக்களத்திற்கு பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும்.

அதில் வங்கிக் கணக்கு திறக்கப்படவுள்ள வங்கியின் பெயர், கணக்கு தலைப்பு, கணக்கை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களது பதவி மற்றும் பெயர், காசோலையில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் ஆண்டுச் சம்பளம் மற்றும் திணைக்கள தலைவரது கையொப்பம் என்பவற்றை குறிப்பிடுதல் வேண்டும்.

காசோலையில் கையொப்பமிட அதிகாரமளிக்கப்பட்ட இருவரின் நான்கு மாதிரி அடடைகளில் கையொப்பத்தை உறுதிப்படுத்தி திணைக்கள தலைவர் ஊடாக அனுப்புதல்.

காசோலையில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்ட பிணை செலுத்தியவர்களது விபரத்தையும் இணைத்தல் வேண்டும்.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் திணைக்கள தலைவரது கையொப்பத்தை உறுதிப்படுத்தி சிபாரிசு செய்து திறைசேரி செயலாளரிற்கு அனுப்புதல்.

திறைசேரி செயலாளர் வங்கிக் கணக்கின் அவசியத் தன்மையை கருத்திற் கொண்டு அனுமதி வழங்குவார்.

அனுமதிக் கடிதமானது வங்கிக்கு விலாசமிட்டு திணைக்கள தலைவரிற்கு பிரதியிட்டு அனுப்பப்படும்.